×

தீபாவளிக்கு 30 சதவீதம் தள்ளுபடி கதர் விற்பனை இலக்கு ரூ.1.60 கோடி கலெக்டர் தகவல்

காரைக்குடி, அக்.4:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் கதர் விற்பனை செய்ய ரூ.1 கோடியே 60 லட்சம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடியில் உள்ள கதர் பட்டு எம்போரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கவிழா நடந்தது. பிஆர்ஓ பாண்டி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கிவைத்து பேசுகையில், கதர் தொழிலால் வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டியடிக்க முடியும் என்பதை செயல் வடிவில் நிரூபித்து காட்டியவர் காந்தியடிகள். நீங்கள் அணியும் கதராடைகளால் பல அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நடக்கிறது என்பதை உணர வேண்டும். எனவே கதர் ஆடையினை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடடையாகும்.

தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகள் பிறந்த தினம் உள்பட தேசியத் தலைவர்களின் நினைவு தினங்களில் கதராடை அணிய வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதராடையாவது வாங்கி வாரத்தில் ஒருமுறை அணிந்து கதர் நெசவாளர் குடும்ப முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.1 கேடியே 60 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு அரசு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றார். மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளர் தேவராஜ், கதர் தொழில்நுட்ப வல்லுநர் சந்தானகிருஷ்ணன், கதர் விற்பனை மைய மேலாளர் சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல் நன்றி கூறினார்.

Tags : Target ,
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...